/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் ரத்தசோகை கண்டறிய ஆய்வு; சுகாதாரத்துறையினர் தீவிரம்
/
பள்ளிகளில் ரத்தசோகை கண்டறிய ஆய்வு; சுகாதாரத்துறையினர் தீவிரம்
பள்ளிகளில் ரத்தசோகை கண்டறிய ஆய்வு; சுகாதாரத்துறையினர் தீவிரம்
பள்ளிகளில் ரத்தசோகை கண்டறிய ஆய்வு; சுகாதாரத்துறையினர் தீவிரம்
ADDED : நவ 07, 2024 08:06 PM
பொள்ளாச்சி ; மத்திய அரசின், தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும், வளரிளம் மாணவியர் இடையே ரத்தசோகை கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணர்களின் உடல் மற்றும் மனநலம் காக்கும் விதமாக, மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் (ஆர்.பி.எஸ்.கே.,) செயல்படுத்தப்படுகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, சுகாதார மருத்துவக்குழுவினர், நேரடியாகச் சென்று அனைத்து, மாணவ, மாணவியரையும் பரிசோதனை செய்து, பிறவி குறைபாடு குறித்த முழு விபரங்களும், குறிப்பேடு அட்டையில் பதிவு செய்யப்படுகிறது. தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காக, பள்ளிகள் தோறும், பொறுப்பாசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
அப்போது, ரத்தத்தில் சராசரி ஹீமோகுளோபின் அளவு 12 மி.கி., முதல் 15 மி.கி., வரை இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதில், 7-க்கும் குறைவாக இருந்தால் அதிக ரத்தசோகை எனவும், 7.1 முதல் 9.9 இருந்தால் சுமாரான ரத்தசோகை எனவும், 10 முதல் 12 வரை இருந்தால் குறைந்த ரத்தசோகை எனவும் கண்டறியப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைவு, குடற்புழு பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படும் என்பதால், அதற்ககேற்ப ஆலோசனையும் அளிக்கப்படுகிறது.
இது குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ''ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் சிகிச்சை, இரும்பு சத்து மருந்துகள் வழங்கி குணமடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.