/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா
/
அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா
ADDED : மார் 18, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் ரோட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் பூ குண்டம் திருவிழா தொடங்கியது. விழாவை ஒட்டி நாள்தோறும் அம்மனுக்கு தீப வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தன. விழாவை ஒட்டி காலை, 8.00 மணிக்கு பூ குண்டம் திருவிழா நடந்தது. இதில், திரளான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

