/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : ஏப் 27, 2025 09:15 PM
அன்னுார் : அன்னுார், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது.
அன்னுார், தென்னம்பாளையம் சாலையில், பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று, ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தது. நேற்று ஏழாவது ஆண்டு விழா நடந்தது.
காலை 10:30 மணிக்கு கணபதி பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குலதெய்வ பக்தர்கள் வழிபாட்டு மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.