/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நமக்கு நாமே' திட்டத்தில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி
/
'நமக்கு நாமே' திட்டத்தில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி
'நமக்கு நாமே' திட்டத்தில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி
'நமக்கு நாமே' திட்டத்தில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி
ADDED : செப் 25, 2024 08:55 PM
கோவை : 'நமக்கு நாமே' திட்டத்தில், கோவை மாநகராட்சியில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, 52வது வார்டு பீளமேடு ஹட்கோ காலனி, திருவள்ளுவர் நகரில், 'வேல்முருகன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்' என்கிற நிறுவனம் சார்பில், 'நமக்கு நாமே' திட்டத்தில், ரூ.33.50 லட்சம் செலவில், புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
மேயர் ரங்கநாயகி, கிழக்கு மண்டல தலைவி லக்குமி இளஞ்செல்வி ஆகியோர் திறந்து வைத்தனர். உதவி கமிஷனர் முத்துசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ராஜேஷ் கண்ணா, வேல்முருகன் என்டர்பிரைசஸ் பொது மேலாளர் வேலுமணி, 'வாவ் எஜூகேர்' நிறுவனர் ரூபன், இயக்குனர்கள் சந்திரசேகர், காமாட்சி, நிர்வாக இயக்குனர் சாம் நிக்கோலஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.