/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆபத்தான கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள்! உப்பிலிபாளையம் பகுதி மக்கள் காட்டம்
/
ஆபத்தான கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள்! உப்பிலிபாளையம் பகுதி மக்கள் காட்டம்
ஆபத்தான கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள்! உப்பிலிபாளையம் பகுதி மக்கள் காட்டம்
ஆபத்தான கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள்! உப்பிலிபாளையம் பகுதி மக்கள் காட்டம்
ADDED : ஆக 03, 2025 09:33 PM

மா நகராட்சி கிழக்கு மண்டலம், 60வது வார்டானது சிங்காநல்லுார் ஹவுசிங் யூனிட், கக்கன் நகர், தேவேந்திரர் வீதி(1-3 வீதிகள்), பஜனை கோவில் வீதி(1-3), பீம நாயுடு வீதி, வரதராஜ புரம் மெயின் ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, கோ-ஆப்பரேட்டிவ் காலனி, சி.எம்.சி., காலனி, டி.என்.இ.பி., காலனி உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது.
சுமார், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதிகளில் பிரச்னைகள் ஏராளம். புதர்மண்டிய மயானம், மோசமான நிலையில் கழிப்பிடம், ரோடு மோசம், பயன்பாடற்ற பூங்கா, ஆபத்துகள் நிறைந்த அங்கன்வாடி மையம் என, பிரச்னைகளை அடுக்குகின்றனர் அப்பகுதி மக்கள். 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என, குமுறும் வார்டு மக்கள் தற்போதைய அரசு மீது அதிருப்தி உள்ளதாக கூறுகின்றனர்.
சொன்னதோடு சரி! சரவணன்: இங்குள்ளவர்களுக்கு ஒரே மயானம் உப்பிலிபாளையத்தில்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த மயானம் பராமரிக்கப்படாததால் புதர்மண்டி கிடக்கிறது. உள்ளே செல்லமுடிவதில்லை. மழை காலங்களில் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சியிடம் மனு அளித்தபோது, உப்பிலிபாளையம் மயானத்திற்கு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள ரூ.10 லட்சத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை, 10ம் தேதி ஒப்பந்தப்புள்ளியும் பெறப்பட்டுள்ளது என்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் செயல்படும் அங்கன்வாடி மையம் மோசமாக உள்ளது. ஓட்டு கட்டடத்தின் சுவர்களில் விரிசல் உள்ளது. மரம் விழுந்தால் கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுகாதாரமற்ற சூழல் இந்துராணி: தேவேந்திரர் வீதியில் உள்ள பொது கழிப்பிடம் மோசமாக உள்ளது. சி.எம்.சி., காலனியில் சாக்கடை வசதி போதுமானதாக இல்லாததால் மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் அவர்களுக்கு சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு போதியளவில் கழிப்பிட வசதியும் இல்லை. பெண்கள், ஆண்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் அதிகம் பயில்கின்றனர். சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பத்ரகாளியம்மன் கோவில் எதிரே உள்ள மைதானத்தை ஒட்டி அரசுக்கு சொந்தமான, 15 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் கட்டடம் எழுப்பி பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தலாம். அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திக்
சீனிவாசா நகர் போன்ற இடங்களில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அருகேஉப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியும் உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு விட வாகனங்களில் வரும் போது திணறுகின்றனர். ரோடு சீரமைக்க பல கோடிகளை செலவிடுகின்றனர். ஆனால், தரமற்ற ரோடுகளால் வீணாவது மக்கள் வரிப்பணம்தான். - ரேவதி
இங்கு கடந்து செல்லும் சங்கனுார் வாய்க்காலின் கரையை அரைகுறையாக துார்வாரி உள்ளனர். புதர்மண்டி கிடப்பதால் மழை காலங்களில் அடைப்பு ஏற்படுகிறது. அருகே குடியிருப்புகளும் உள்ளதால் அச்சத்துடன் இருக்கிறோம். பத்ரகாளியம்மன் கோவில் எதிரே உள்ள மாநகராட்சி பூங்கா பயனற்று கிடக்கிறது. பூங்கா உபகரணங்கள் மோசமாகவும், பராமரிப்பின்றியும் இருப்பதால் பொழுதுபோக்குக்கு வழியில்லை. - பிரவீன்