/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.16 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு
/
ரூ.16 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு
ADDED : ஜன 04, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : 'நமக்கு நாமே' திட்டத்தில், காளப்பட்டியில் ரூ.16 லட்சத்தில், தன்னார்வ நிறுவனத்தின் நிதியுதவியுடன், நவீனமாக கட்டியுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. கற்றல் ஆய்வகம், விளையாட்டு பகுதி, தோட்டம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேயர் கல்பனா திறந்து வைத்தார். கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி, கவுன்சிலர் விஜயகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.