/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணிகள் பாதிப்பில்லை: திட்ட அலுவலர்கள் தகவல்
/
அங்கன்வாடி பணிகள் பாதிப்பில்லை: திட்ட அலுவலர்கள் தகவல்
அங்கன்வாடி பணிகள் பாதிப்பில்லை: திட்ட அலுவலர்கள் தகவல்
அங்கன்வாடி பணிகள் பாதிப்பில்லை: திட்ட அலுவலர்கள் தகவல்
ADDED : நவ 12, 2025 11:06 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் அன்றாட பணிகள் பாதிக்காத வகையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, கடந்த 4ம் தேதி முதல் டிச., 4 வரை நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவ்வகையில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில், படிவம் வழங்கும் பணியில் அங்கன்வாடி மற்றும் பிற துறை சேர்ந்த பணியாளர்கள், பி.எல்.ஓ.,க்களாக செயல்பட்டும் வருகின்றனர்.
அதில், அங்கன்வாடி பணியாளர்களைப் பொறுத்தமட்டில், அவர்களின் அன்றாடப் பணியும் பாதிக்காத வகையில், பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறிய தாவது:
சில அங்கன்வாடி பணியாளர்கள், காலை, 6:00 மணிக்கு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு செல்கின்றனர். அதன்பின், 9:30 மணிக்குள் அங்கன்வாடி வந்து, அன்றாட பணிகளை மேற்கொள்கின்றனர்.
மீண்டும், மதியம், 2:00 மணிக்கு மேல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு செல்கின்றனர். குறிப்பாக, அங்கன்வாடி பணியாளர்கள் காலையில் வாக்காளர் பட்டியாளர் திருத்தப் பணிக்குச் சென்றாலும், உதவியாளர் கொண்டு அன்றாட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
உதவியாளர் இல்லாத அங்கன்வாடிகளில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, அருகே உள்ள பிற அங்கன்வாடியுடன் இணைந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தினமும், அங்கன்வாடி பணியாளர்கள் களப் பணிக்கு செல்வதும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.

