/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை :கிராமங்களை கணக்கிட்டு சிகிச்சை தீவிரம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை :கிராமங்களை கணக்கிட்டு சிகிச்சை தீவிரம்
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை :கிராமங்களை கணக்கிட்டு சிகிச்சை தீவிரம்
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை :கிராமங்களை கணக்கிட்டு சிகிச்சை தீவிரம்
ADDED : நவ 12, 2025 11:06 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்ட கால்நடைத்துறையில், வடசித்துார், வேட்டைக்காரன்புதுாரை தலைமையிடமாக கொண்டு, இரு நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில், தொலைதுார கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி, கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில் கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களுக்கு தலா ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர், உதவியாளர், டிரைவர் தலா ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, வடசித்துாரை தலைமையிடமாகக் கொண்டு, திங்கள்கிழமை - செட்டிகாபாளையம், பட்டணம்; செவ்வாய் - கோதவாடி, தேவரடிபாளையம்; புதன் - மயிலேரிபாளையம், கல்லாபுரம்; வியாழன் - தேவராயபுரம், நெ.10.முத்துார்; வெள்ளி - சிங்கராயபுரம், முத்துக்கவுண்டன்புதுார்; சனி - சட்டக்கல்புதுார், நடுப்புணி கிராமங்களில் ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்படும்.
இதேபோல, மற்றொரு வாகனம், வேட்டைக்காரன்புதுாரை தலைமையிடமாகக் கொண்டு, திங்கள் - செமணாம்பதி, காந்திஆசிரம்; செவ்வாய் - திவான்சாபுதுார், மணக்கடவு; புதன் - கரியாஞ்செட்டிபாளையம், ரமணமுதலிபுதுார்; வியாழன் - பருத்தியூர், ஜல்லிப்பட்டி; வெள்ளி - நரிக்கல்பதி, பந்தக்கால் அம்மன்பதி; சனி - சரளபதி, தேவிப்பட்டிணம் பகுதிகளில் நிறுத்தப்படுகிறது.
கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு கூறியதாவது:
கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை மற்றும் சினை ஊசி செலுத்துதல், நோய் தடுப்பு மர்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கோழிகளுக்கு இலவச சிகிச்சைகள் இந்த வாகனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. குதிரை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மதியத்துக்குப் பின், '1962' என்ற அவசர உதவி எண்ணில் பெறப்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.

