/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு இரு வேளை பணி ஒதுக்கீடு: சுகாதார பணி கள் தீவிரம்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு இரு வேளை பணி ஒதுக்கீடு: சுகாதார பணி கள் தீவிரம்
துாய்மைப் பணியாளர்களுக்கு இரு வேளை பணி ஒதுக்கீடு: சுகாதார பணி கள் தீவிரம்
துாய்மைப் பணியாளர்களுக்கு இரு வேளை பணி ஒதுக்கீடு: சுகாதார பணி கள் தீவிரம்
ADDED : நவ 12, 2025 11:06 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், துாய்மைப் பணியாளர்களுக்கான பணி நேரம், காலை மற்றும் மதியம் என, இரு வேளைகள் ஒதுக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்டு, 36 வார்டுகளில், குப்பையை அகற்றுவது, தரம் பிரித்து உரமாக்குவது, மக்காத குப்பையை உரிய முறையில் மறுசுழற்சி செய்வது, திடக்கழிவு மேலாண்மை என, சுகாதாரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நிரந்தர மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில், 216க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும், பல வார்டுகளில் குப்பையை தரம் பிரித்து பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இவர்களுக்கான பணி நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, சுகாதாரப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, காலை, 6:00 முதல் காலை, 11:00 மணி வரையும், மதியம், 2:00 மணி முதல் 5:00 மணி வரையும் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
குப்பையை வகைப்பிரித்து அளிக்க வீடுகள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனனை முறையாக பின்பற்ற குடியிருப்பு வாசிகள் முன்வருவதில்லை. ஆங்காங்கே சாலையோரம் குப்பையை மூட்டையாக கட்டி வீசிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது, துாய்மைப் பணியாளர்கள், தினமும் இரு வெவ்வேறு பகுதிகளில் குப்பையை சேகரம் செய்து வருகின்றனர். அதற்கேற்ப, குடியிருப்புவாசிகள், துாய்மைப் பணியாளர்கள் வசம் குப்பையை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

