/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்; தி.மு.க. விழிப்புணர்வு கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்; தி.மு.க. விழிப்புணர்வு கூட்டம்
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்; தி.மு.க. விழிப்புணர்வு கூட்டம்
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்; தி.மு.க. விழிப்புணர்வு கூட்டம்
ADDED : நவ 12, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க. சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர பொருளாளர் மூர்த்தி தலைமை வகித்தார். நகராட்சி துணை தலைவர் கவுதமன், துணை செயலாளர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சண்முகபிரியா, வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.