தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எங்களுக்கும் லீவு விட வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

எங்களுக்கும் லீவு விட வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

எங்களுக்கும் லீவு விட வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்


ADDED : மே 04, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், 1,444 அங்கன்வாடி மையங்கள், 196 குறு அங்கன்வாடி மையங்கள் என, மொத்தம், 1,640 மையங்கள் உள்ளன. இவற்றில், பணியாளர்கள், 45, குறு அங்கன்வாடி பணியாளர்கள், 188, உதவியாளர்கள், 412 என மொத்தம், 645 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் முறையே, 13, 23, 101 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதவியாளர்கள் இல்லாத இடங்களில் அவர்களின் பணியையும், ஆசிரியரே கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு சில இடங்களில், கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

கோடை காலத்தில் பெரிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை.

கோடைகாலத்தில் குழந்தைகள் மையங்களுக்கு வருவதில்லை. எனவே எங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அலமேலுமங்கை தலைமை வகித்தார். செயலாளர் மாலினி, சி.ஐ.டி.யு., ஊரக உள்ளாட்சித் துறை பொதுச்செயலாளர் ரத்தனகுமார், கோவை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us