/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்
ADDED : பிப் 17, 2024 02:21 AM

கோவை';கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.2,000 வழங்கப்படுகிறது; வாழ்வாதாரத்துக்கு சமாளிக்க முடியாததால், அகவிலைப்படியுடன் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலு மங்கை, இணை செயலாளர் மாலினி உட்பட பலர் பங்கேற்றனர். மொத்தம், 150 பேர் கைது செய்யப்பட்டனர்.