/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
/
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
பருவ நிலை மாற்றத்தால் நோய் கால்நடை கண்காணிப்பு அவசியம்
ADDED : மே 24, 2025 06:28 AM
' திடீர் மழை, வெயிலும் பதிவாகி வருவதால் கால்நடை பராமரிப்பு, நோய் மேலாண்மை, கண்காணிப்பு முக்கியம்,' என, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது
திருப்பூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த மாதாந்திர பயிற்சி முகாம் நடந்தது. கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உதவி பேராசிரியர் மதிவாணன் பேசுகையில்,'' வெயில், திடீர் மழை என பருவமழை நிலை மாற்றம் துவங்கியுள்ளது. மழை காலம் துவங்கும் முன்பாகவே கொட்டகைகளை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாள் வெயில் என்றாலும், அதிகமாகும் போது, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு, நோய் மேலாண்மை முக்கியம்,'' என்றார்.
-- நமது நிருபர் -