ADDED : டிச 25, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி; கரவழி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், 30ம் தேதி ஜெயந்தி விழா மற்றும் ஆண்டு விழா நடக்கிறது.
சூலூர் அடுத்த கரவழி மாதப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, வரும், 30ம் தேதி எட்டாம் ஆண்டு விழாவும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் நடக்கிறது.
காலை, 7:30 மணிக்கு, ஹரி வாயு ஸ்ருதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடக்கிறது. 10:00 மணிக்கு அபிஷேக பூஜை துவங்குகிறது. 12:30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
காலை, 9:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனை, கலை நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. மாலை, 4:00 மணிக்கு கோலாட்டம்,நாம சங்கீர்த்தனம், 7:30 மணிக்கு கம்பத்து ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

