/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அன்ன அலங்காரம்
/
வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அன்ன அலங்காரம்
ADDED : நவ 17, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. ஐப்பசி மாத அன்னாபிஷேக சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.
அர்ச்சகர் ஜோதி வேலவன், சிறப்பு பூஜை செய்தார். 50 கிலோ அன்னத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.