/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீண்டும் கடை ஒதுக்க வேண்டுகோள்
/
அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீண்டும் கடை ஒதுக்க வேண்டுகோள்
அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீண்டும் கடை ஒதுக்க வேண்டுகோள்
அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு மீண்டும் கடை ஒதுக்க வேண்டுகோள்
ADDED : மார் 20, 2024 12:49 AM
கோவை;கோவை அண்ணா மார்க்கெட்டில் ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே, மீண்டும் ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, 69வது வார்டில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. 476 வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இவ்வளாகத்தை புதுப்பித்து, மேடைக்கடைகள் அமைக்கும் பணி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு, 36 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே மீண்டும் ஒதுக்க வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
புதிதாக கடைகள் கட்டுவதால், பொது ஏலம் முறையில் டெண்டர் கோரப்பட்டு, ஒதுக்கீடு செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதையறிந்து மார்க்கெட் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஏற்கனவே உறுதியளித்தபடி, பழைய வியாபாரிகளுக்கே கடை ஒதுக்க வேண்டுமென, கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட்டை புதுப்பித்தபோது, அங்கிருந்த பழைய வியாபாரிகளுக்கே, கடை ஒதுக்கப்பட்டது. அதேபோல், அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கே ஒதுக்குவதாக, ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
இப்போது, திடீரென ஏல முறையில் ஒதுக்கப்படும் என கூறுகின்றனர். இதனால், வியாபாரிகளும், அவர்களை சார்ந்த தொழிலாளர்களும், குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். அதனால், பழைய வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

