பள்ளி மாணவர்களுக்கு அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
ADDED : நவ 14, 2026 02:45 PM

கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று (நவ.,14) கோவை நேரு ஸ்டேடியம் எதிரே நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் 180 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் ஸ்டேடியம் எதிரே துவங்கி வ.உ.சி. மைதானம் அருகே, அவிநாசி ரோடு வழியாக மீண்டும் ஸ்டேடியம் அடைந்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. நான்கு முதல் 10வது வரை இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. பதக்கங்களும் அளிக்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, கோவை மாவட்ட தடகள சங்கம் தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
