/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை தடகள போட்டி: வீரர், வீராங்கனைகள் சாதனை
/
அண்ணா பல்கலை தடகள போட்டி: வீரர், வீராங்கனைகள் சாதனை
அண்ணா பல்கலை தடகள போட்டி: வீரர், வீராங்கனைகள் சாதனை
அண்ணா பல்கலை தடகள போட்டி: வீரர், வீராங்கனைகள் சாதனை
ADDED : நவ 20, 2024 10:42 PM

கோவை; அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டியில் தொடர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளில் மாணவ, மாணவியர் அசத்தினர்.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 10வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் கடந்த, 18ம் தேதி முதல் நடந்துவருகிறது. முதல் நாளில் இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியிலும், தொடர்ந்து கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியிலும் போட்டிகள் நடக்கிறது.
இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கிருஷ்ணா கல்லுாரியில் ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் ஆதவன், அஜய் மற்றும் எம்.சி.இ.டி., மாணவர் முத்துசெல்வன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து, 400 மீ., ஓட்டத்தில், வி.எஸ்.பி.சி.இ., மாணவர் அபினேஷ், எஸ்.ஆர்.ஐ.டி., மாணவர் ஜிதேந்திரகுமார், இந்துஸ்தான் மாணவர் ஹேம்நாத் தங்கவேல் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், 800 மீ., ஓட்டத்தில், கிருஷ்ணா கல்லுாரி கார்த்திகேயன், இந்துஸ்தான் மாணவர் கிருஷ்ணா, எஸ்.இ.சி.இ., மாணவர் அருண் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், இந்துஸ்தான் மாணவி அனுமாலிகா, கிருஷ்ணா கல்லுாரி நிசிஹா, ஜே.சி.டி., மாணவி ஜெசி ஆகியோரும், 200 மீ., ஓட்டத்தில், இந்துஸ்தான் அனுமாலிகா, என்.ஐ.டி., பிரவீனா, ஜே.சி.டி., ஜெசி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து, 800 மீ., ஓட்டத்தில், எஸ்.இ.சி.இ., மாணவி கமலா, இந்துஸ்தான் மாணவியர் நேவ்மா, கோபிகா ஆகியோரும், 5,000 மீ., ஓட்டத்தில், ஜே.சி.டி., மாணவியர் அர்ச்சனா, மரியா சரபோவா, வி.எஸ்.பி., மாணவி சந்திரமுகி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
'போல் வால்ட்' போட்டியில் கிருஷ்ணா கல்லுாரி மாணவி தரணியா முதலிடம் பிடித்தார். குண்டு எறிதலில் பி.ஏ., கல்லுாரி மாணவி மவுனிகா, எஸ்.இ.சி.இ., மாணவி கிர்த்திகா, எம்.சி.இ.டி., மாணவி சந்தியா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.