/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டி காலிறுதியில் போராடிய வீராங்கனைகள்
/
அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டி காலிறுதியில் போராடிய வீராங்கனைகள்
அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டி காலிறுதியில் போராடிய வீராங்கனைகள்
அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டி காலிறுதியில் போராடிய வீராங்கனைகள்
ADDED : டிச 09, 2024 06:48 AM

கோவை,: அண்ணா பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான கூடைப்பந்து காலிறுதி போட்டியில் சென்னை புனித ஜோசப் அணியும், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணியும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தின.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களுக்கு இடையே பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியில் நேற்று முன்தினம் துவங்கின. 11 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகளை, அண்ணா பல்கலை விளையாட்டு வாரிய தலைவர் செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
இந்துஸ்தான் கல்லுாரி முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். முதல் காலிறுதியில், சென்னை ஜே.பி.ஆர்., அணி, 32-20 என்ற புள்ளி கணக்கில், கோவை ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.
தொடர்ந்து, சென்னை புனித ஜோசப் கல்லுாரி அணியும், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணியும் மோதின. இரு அணி வீராங்கனைகளும் வெற்றிக்காக போராடிய நிலையில், 59-57 என்ற புள்ளிகளில் புனித ஜோசப் கல்லுாரி அணி, வெற்றி பெற்றது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., அணியும், கொங்கு இன்ஜி., கல்லுாரி அணியும் மோதிய போட்டியில், 56-41 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.என்.ஏ., அணி வெற்றி பெற்றது.
நான்காம் காலிறுதியில், கோவை கே.பி.ஆர்., அணி, 28-11 என்ற புள்ளி கணக்கில், யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்(திருச்சி) அணியை வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றன.