அண்ணா பல்கலை 'லீக்' போட்டி: மாணவ, மாணவியர் அசத்தல்
அண்ணா பல்கலை 'லீக்' போட்டி: மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : மார் 19, 2026 07:01 PM

கோவை:அண்ணா பல்கலை மண்டல மையத்தில் கால்பந்து, கிரிக்கெட், கபடி போட்டிகள் 'லீக்' முறையில் மாணவ, மாணவியருக்கு நடக்கின்றன. பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஒவ்வொரு போட்டியிலும் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
மாணவர்களுக்கான கபடி போட்டியில் ரெய்டிங் லையன்ஸ் அணி 10 புள்ளி, டைடன் டேக்கிளர்ஸ் 7, இன்பெர்னோ டாமினேட்டர்ஸ், 6, கபாடி கிங்ஸ் 3, ரேபிட் ரைடர்ஸ் அணியினர் 3 புள்ளியுடன் உள்ளனர். செஸ் போட்டியில், ராயல் கேம்பிட்ஸ் அணியினர் 4.5, பிசப்ஸ் பேலட் 4, செக்மேட் சிண்டிகேட் 3.5, பான் வாரியர்ஸ் 3, ஷேடோ நைட்ஸ் 1.5, ரூத்லெஸ் ரூக்ஸ் 1.5 புள்ளியுடன் முன்னனியில் இருக்கின்றனர்.
கூடைப்பந்து போட்டியில் டிரிபிள் டினாஸ்டி 12, பசூர் சார்க்ஸ் 9, ஹூப் ஹஸ்ட்லர்ஸ் 6, நெட் நிஜாஸ் 3 புள்ளியுடனும், கால்பந்து போட்டியில் புளூ லயன்ஸ் 8, பைட்டர் கிளப் 4, ஜிஜூ எப்.சி., 3, சூப்பர் ஸ்டிரைக்கர்ஸ் 3, தண்டர் டைகர்ஸ் 1 புள்ளி பெற்றுள்ளது. வரும் 21ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.
