/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை ஆண்களுக்கான டென்னிஸ்: பி.எஸ்.ஜி., அணியை வென்று சி.ஐ.டி., சபாஷ்
/
அண்ணா பல்கலை ஆண்களுக்கான டென்னிஸ்: பி.எஸ்.ஜி., அணியை வென்று சி.ஐ.டி., சபாஷ்
அண்ணா பல்கலை ஆண்களுக்கான டென்னிஸ்: பி.எஸ்.ஜி., அணியை வென்று சி.ஐ.டி., சபாஷ்
அண்ணா பல்கலை ஆண்களுக்கான டென்னிஸ்: பி.எஸ்.ஜி., அணியை வென்று சி.ஐ.டி., சபாஷ்
ADDED : அக் 07, 2024 12:54 AM

கோவை : அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
அவிநாசி ரோடு, கோயம்புத்துார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(சி.ஐ.டி.,) மைதானத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(9வது மண்டலம்) கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 68-62 என்ற புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி., டெக்., அணியை வென்று முதலிடம் பிடித்தது. கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 70-19 என்ற புள்ளி கணக்கில், சி.ஐ.டி., கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.
கால்பந்து இறுதி போட்டியில், பி.எஸ்.ஜி., ஐ டெக்., மற்றும் என்.ஜி.பி., கல்லுாரி அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், பெனால்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்து, பி.எஸ்.ஜி., ஐ டெக்., அணி வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., டெக்., அணியை வென்று முதலிடம் பிடித்தது.
கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.
ஹாக்கி இறுதி போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
சி.ஐ.டி., கல்லுாரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில், பார்க் கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.வெற்றி பெற்றவர்களுக்கு, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.