/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
/
ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
ADDED : நவ 05, 2025 09:48 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி நிகழ்வையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவையொட்டி ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் சுவாமி, அன்னாபிஷேக அலங்காரம் மற்றும் காய்கறி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடம் உள்ளது. இங்கு சிவன் வைத்தீஸ்வரர் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதனையொட்டி ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வைத்தீஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு வைத்தீஸ்வருக்கு வில்வம், திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள், பால், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், மக்கள் ஆரோக்கியமாக வாழவும் வேண்டிக்கொள்ளப்பட்டது.
வைத்தீஸ்வரருக்கு 15 கிலோ அன்னம், 30 கிலோ காய்கறிகளால் ஆன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மயூரம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.---

