ADDED : நவ 05, 2025 08:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொண்டா முத்தூர் --- மாதம்பட்டி செல்லும் சாலையோரத்தில், சந்தே கத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த, வடமாநிலத்தவர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், இருவரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பிஸ்னுசர ண்,45 மற்றும் நாகு,34 ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இருவரையும் பிடித்த தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர் களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

