/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டைக் கடலை விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
கொண்டைக் கடலை விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
கொண்டைக் கடலை விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
கொண்டைக் கடலை விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 05, 2025 08:22 PM
கோவை: விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் மாரிமுத்து அறிக்கை:
ஐப்பசி கார்த்திகைப் பட்டம் கொண்டைக் கடலை விதைக்க ஏற்ற பருவம். கொண்டைக் கடலை நல்ல மகசூல் தரவல்ல, குளிர் காலத்துக்கு ஏற்ற பயிர். அரசு விதைப்பண்ணை அணைக்க விருப்பமுள்ள விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம்.
அரசால் அறிவிக்கப்பட்ட ரகங்களான என்.பிஇ.ஜி.,-47, 49, 119 ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். என்.பிஇ.ஜி.,-47, 49 ஆகிய ரகங்கள் 90 முதல் 105 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். பூக்கள் ஊதா நிறத்தில் காணப்படும். என்.பிஇ.ஜி.,-119 ரகம் வெள்ளி நிறத்தில் காணப்படும். 90 முதல் 95 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும்.
விதைப்பண்ணையில் உரிய நடைமுறையைப் பின்பற்றி, உற்பத்தி செய்யப்படும் விதைகள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, விதைசுத்தி, தூய்மை உள்ளிட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, சான்றளிக்கப்பட்ட விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கொண்டைக் கடலை விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் அணுகலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

