/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலக்கல் கோவிலில் அன்னதான திட்டம் விரிவு
/
சூலக்கல் கோவிலில் அன்னதான திட்டம் விரிவு
ADDED : மே 19, 2025 11:23 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகேயுள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு அருகேயுள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலுக்கு தினம்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். மேலும், விசேஷ நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தினமும், 50 பக்தர்களுக்கு அன்னதானமும், திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில், 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தற்போது, தேர்த்திருவிழா துவங்கியுள்ள நிலையில், அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தியதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.