/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாதுரை சிலை சிக்னலால் தவிப்பு
/
அண்ணாதுரை சிலை சிக்னலால் தவிப்பு
ADDED : ஏப் 21, 2025 06:37 AM

கோவை: அவிநாசி ரோட்டில் அண்ணாதுரை சிலை அருகே உள்ள சிக்னல், பாலசுந்தரம் ரோடு, ஒசூர் ரோடு, அவிநாசி ரோடுகளின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த சிக்னலில் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து நிற்கின்றனர்.
வ.உ.சி., பார்க் அருகே இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும், வாகன ஓட்டிகளுக்கான சிக்னலில் எந்த விளக்கும் எரிவதில்லை.
அதே சமயம், பாலசுந்தரம் சாலைக்குத் திரும்பும் வாகன ஓட்டிகள், தங்களுக்கான பச்சை விளக்கு எரிந்ததும் வாகனத்தை இயக்கினால், மறுபுறம் இருந்து வரும் வாகனங்களும், சிக்னல் எரியாததால் நிற்காமல் செல்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர். சிறு, சிறு சச்சரவுகளும் ஏற்படுகின்றன. விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
பிரதான பகுதியில் இந்த சிக்னலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

