/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி; பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக அதிருப்தி
/
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி; பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக அதிருப்தி
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி; பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக அதிருப்தி
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி; பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக அதிருப்தி
ADDED : அக் 02, 2025 12:44 AM

கோவை; அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, கோவையில் நடந்த சைக்கிள் போட்டி, பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக, அதிருப்தி எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, சைக்கிள் போட்டி சில நாட்களுக்கு முன் நடந்தது.
13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு, 10 கி.மீ., 15 கி.மீ., 20 கி.மீ., என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலா முதல் மூன்று பரிசுகளாக ரூ.5,000, ரூ.3,000, ரூ.2000 மற்றும் நான்கு முதல், 10 இடங்களில் வந்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு அறிவிக்கப்பட்டது.
இப்போட்டி குறித்த அறிவிப்பு, பள்ளிகளுக்கு இரு நாட்களுக்கு முன் மாலைதான் சென்றடைந்தது. இதனால் ஒவ்வொரு பிரிவிலும், 35க்கும் குறைவான மாணவ, மாணவியரே பங்கேற்றனர். வெற்றியாளர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்பட்டாலும், திறமை இருந்தும் பலரால் பங்கேற்க முடியவில்லை.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'சைக்கிள் போட்டி குறித்த அறிவிப்பு, போட்டிக்கு முந்தைய நாள்தான் பல பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறை சமயத்தில் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
முறையான அறிவிப்பில்லாததால், சொற்ப அளவிலான மாணவ, மாணவியரே பங்கேற்றனர். வரும் காலங்களில் முன்கூட்டியே தகவல் அளித்தால், அதிகமானோர் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்' என் றனர்.