/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராயல் கேர் மருத்துவமனை நடத்திய சிறப்பு பட்டிமன்றம்
/
ராயல் கேர் மருத்துவமனை நடத்திய சிறப்பு பட்டிமன்றம்
ராயல் கேர் மருத்துவமனை நடத்திய சிறப்பு பட்டிமன்றம்
ராயல் கேர் மருத்துவமனை நடத்திய சிறப்பு பட்டிமன்றம்
ADDED : அக் 02, 2025 12:44 AM

கோவை; கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பில், 'செயற்கரிய செயல் தவமா? தானமா?' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். பட்டிமன்றத்துக்கு நடுவராக, சொற்பொழிவாளர் சுகி.சிவம் இருந்தார்,
'தவமே' என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராமலிங்கம், நீலகண்டன் மற்றும் பிரிட்டோ ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அவர்கள், 'விடாமுயற்சியும், தனிமனித ஒழுக்கமும், தவத்தினால் பெறப்படும் ஆற்றலுமே, செயற்கரிய செயல்களுக்கு அடிப்படை' என்று வாதிட்டனர்.
இதற்கு எதிராக 'தானமே' என்ற தலைப்பில் பேசிய பேச்சாளர்களான பர்வீன் சுல்தானா, கோவை சாந்தாமணி மற்றும் சிவகுருநாதன் ஆகியோர், 'தியாக மனப்பான்மையுடனும், பிறருக்கு உதவும் நோக்கத்துடனும் செய்யப்படும் தானமே சிறந்த அறம்' என்றும், 'அதுவே சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது' என்றும், தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
'கல்வி தானமாக வழங்கப்பட்டதன் விளைவாகவே, இந்தியாவிலேயே தமிழகம் இன்று தனித்துவமான மாநிலமாகத் திகழ்கிறது' என, நடுவர் சுட்டிக்காட்டினார்.