/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன்விழா கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
/
பொன்விழா கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
ADDED : அக் 02, 2025 12:45 AM

தொண்டாமுத்தூர்; ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில், 1975ம் ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி.படித்த முன்னாள் மாணவர்கள், ஓணாப்பாளையத்தில் பொன்விழா கொண்டாடினர்.
கோவையில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில், 1975ம் ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், பள்ளி பருவத்திற்கு பின் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிப்படிப்பை முடித்து, 50ம் ஆண்டு, பொன்விழா சந்திப்பு, ஓணாப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.
இதில், முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளிக்கால நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 26 முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.