/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடி கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஈஷா
/
பழங்குடி கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஈஷா
பழங்குடி கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஈஷா
பழங்குடி கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஈஷா
ADDED : அக் 02, 2025 12:45 AM

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
ஈஷா அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கும் விழா நேற்று, ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
இவ்விழாவில், ஆனைகட்டி தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வர் அமராவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
இதில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
இவ்விழாவில், ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் சுவாமி சித்தாகாஷா, மா ஜாக்ருதி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.