/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு பெற்ற பொறியாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம்
/
பதிவு பெற்ற பொறியாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம்
பதிவு பெற்ற பொறியாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம்
பதிவு பெற்ற பொறியாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம்
ADDED : அக் 02, 2025 12:46 AM
கோவை; கோவை, பதிவு பெற்ற பொறியாளர் சங்கம் சார்பில், ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநரகத்தின் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் நேசர், பொறியாளர்கள் தற்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
தமிழக அரசு, 2,500 சதுரடி வரையிலான குடியிருப்பு மனைகளில், 3,500 சதுரடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு சுய சான்று அடிப்படையில், இணையவழி வாயிலாக கட்டட அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கும் போது, ஒப்பமிட்ட பதிவு பெற்ற பொறியாளர்கள் அறிய, அவர்களுக்கு ஓ.டி.பி., வரும் வகையில் ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவர் வேலுமயில், துணை தலைவர் அருணகிரி, செயலாளர் அங்கப்பன், பொருளாளர் ராயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.