/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி
/
பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 02, 2025 12:47 AM
கோவை; கோவை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு, வேளாண் கருவிகள் பழுது பார்ப்பதற்கான, ஒரு மாத கால பயிற்சி துவங்கியது. உதவி கலெக்டர் (பயிற்சி)பிரசாந்த் துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் பேசுகையில், “தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறையின் நிதியுதவியுடன் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.
வேளாண் கருவிகளின் பயன்பாடு, வயல்களில் அவற்றை இயக்குதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். வளாகத் தேர்வு வாயிலாக, வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும்,” என்றார்.
பழங்குடியினர் நல இயக்குனரக மாநில திட்ட மேலாளர் பொன் வைத்தியநாதன் பேசுகையில், “பழங்குடி மக்களுக்காக 20 இடங்களில், வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற பயிற்சி, விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையை நீக்க உதவும். படித்த பழங்குடி இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் அளிக்கும்,” என்றார்.
வேளாண் பொறியியல் நிறுவன தலைவர் ரவீந்தர நாயக், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா, முதுநிலை விஞ்ஞானி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் பொறியியல் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.