ADDED : ஏப் 11, 2026 10:39 PM

அ நிறம் | அளவு
கோவை: பலகாரக்கடையில் முறுக்கு பிழிந்து வானதி சீனிவாசனுக்கு பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓட்டு சேகரித்தார்.
கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில், வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓட்டு சேகரித்தார்.
நல்லாம்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து, அவர் ஓட்டு சேகரித்தார். அப்பகுதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் ஓட்டு சேகரித்தார். அப்போது கடையில் இருந்த இயந்திரத்தை பயன்படுத்தி முறுக்கு பிழிந்தார். அவர் முறுக்கு சுட்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் பாராட்டினர்.
