/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எக்ஸ்' தளத்தில் அண்ணாமலைக்கு இன்னும் அதிகரிக்கிறது செல்வாக்கு
/
'எக்ஸ்' தளத்தில் அண்ணாமலைக்கு இன்னும் அதிகரிக்கிறது செல்வாக்கு
'எக்ஸ்' தளத்தில் அண்ணாமலைக்கு இன்னும் அதிகரிக்கிறது செல்வாக்கு
'எக்ஸ்' தளத்தில் அண்ணாமலைக்கு இன்னும் அதிகரிக்கிறது செல்வாக்கு
ADDED : மே 28, 2025 01:43 AM

கோவை : பா.ஜ., மாநிலத் தலைவர் பதவியில் இல்லாதபோதும், அண்ணாமலைக்கு, எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது.
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவரை, 9.81 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். அது தற்போது, 9.87 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, அவரை கூடுதலாக 6 ஆயிரம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
அதேசமயம், தமிழக பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை, 6.29 லட்சமாகவே தொடர்கிறது.
நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரை 11 ஆயிரம் பேர் கூடுதலாக பின்தொடர்கின்றனர். அவரைப் பின்தொடர்பவர் எண்ணிக்கை, 89 ஆயிரமாக உள்ளது.