/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஜி.வி., பள்ளியில் ஆண்டு விழா
/
பி.ஜி.வி., பள்ளியில் ஆண்டு விழா
ADDED : ஜன 16, 2026 05:12 AM

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவை பள்ளியின் தலைவர் டாக்டர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். தாளாளர் முத்துலட்சுமி, அறங்காவலர் அருணா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கவிதா ஜவகர், கல்வியை நமக்கு துணையாக கொண்டால், எப்பொழுதும் வெற்றி பெறலாம். சிறந்த நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அது உங்களுடைய வாழ்க்கைக்கு நல்வழி காட்டும். தாய், தந்தையர் மீது அக்கறை உடையவர்களாக இருங்கள். அவை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும் என்றார்.
விழாவில், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

