ADDED : மார் 19, 2025 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி திவ்யா வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் வனிதாமணி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டார். ஆண்டு மலரை வெளியிட்ட அவர், ''மாணவர்கள் சிறப்பான நிலையை அடைய, பெற்றோரும் ஆசிரியரும் உறுதுணையாக இருத்தல் வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, ஆண்டு விழாவையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றன. முடிவில் மாணவி பவதாரணி நன்றி கூறினார்.