ADDED : மார் 27, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பூசாரிபட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 11வது ஆண்டு விழா நடந்தது. ஹயக்கிரீவா கல்வி நிறுவனங்கள் செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். தலைவர் ரத்தினம் முன்னிலை வகித்தார்.
முன்னதாக, தாளாளர் சிவானி கிருத்திகா வரவேற்றாார். கல்லுாரி முதல்வர் கண்ணன், ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பிண்ணனிப் பாடகர்கள் ராஜகணபதி, பிரியாஜெர்சன், ரஜீல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில், உதவிப்பேராசிரியர் மேனகா நன்றி கூறினார்.

