ADDED : மார் 03, 2024 12:33 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி;பொள்ளாச்சி டி.இ.எல்.சி., அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி கிறிஸ்டோபர் மனுவேல் செல்லப்பா, நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்கம் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைமையாசிரியர் ராஜேந்திரன், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் அப்புராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
