/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 லட்சம் உறுப்பினர் சேர்த்ததாக அறிவிப்பு
/
5 லட்சம் உறுப்பினர் சேர்த்ததாக அறிவிப்பு
ADDED : செப் 16, 2025 10:04 PM
பொள்ளாச்சி; 'தி.மு.க. கோவை தெற்கு மாவட்டத்தில், ஐந்து லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகேசன் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஆர்வமாக பலரும் சேர்ந்து வருகின்றனர். கோவை தெற்கு மாவட்டத்தில் 2,21,002 குடும்பங்களை சேர்ந்த, 5,02,545 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாதுரை பிறந்த நாள் விழாவையொட்டி உறுதிமொழி படிக்கப்பட்டது. இன்று (17ம் தேதி) கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில், தெற்கு மாவட்டம் சார்பில் திரளாக பங்கேற்க வேண்டும்.வரும், 29ம் தேதி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு, கூறினார்.