/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
/
ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
ADDED : ஜூலை 21, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இன்ஜினியரிங் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டதால், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் - திருச்சி ரயில்வே பகுதியில் லால்பேட்டை - குளித்தலை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, லெவல் கிராசிங்கில் பராமரிப்பு பணிகள், இன்று நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்பாராத காரணங்களால் இப்பணிகள் நடக்கவில்லை. இதையடுத்து இப்பாதையில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - பாலக்காடு(16843) மற்றும் பாலக்காடு - திருச்சி(16844) எக்ஸ்பிரஸ் ரயில்கள், வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.