/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
/
அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 13, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். கல்வியாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஆசிரியை கீதா ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை தனபால் பங்கேற்று பேசினார்.
விழாவில் சிறந்த மாணவர்களுக்கு கன்னார் பாளையம் ராஜலட்சுமி சாமப்பா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஞானசேகரன், பரிசு வழங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

