/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மாள் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
/
மாரியம்மாள் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : நவ 04, 2025 08:56 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 48வது பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் சகிலா தலைமை வகித்தார். பள்ளி முன்னாள் மாணவியும், கோவை ஜி.ஆர்.டி. கல்லுாரி இணை பேராசிரியருமான வனிதா பேசினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பொன்தென்றல் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவியர் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில், தலைமையாசிரியர் தலைமை வகித்தார். புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மகராணி, ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவியரின் சிலம்பாட்டம் நடந்தது.

