/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும், குழியுமான ரோடு: வாகன ஓட்டுநர்கள் அவதி
/
குண்டும், குழியுமான ரோடு: வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : நவ 04, 2025 08:55 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு, குண்டும், குழியுமாக உருமாறி உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு வழியாக, ஜோதிநகர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்புகள், சூளேஸ்வரன்பட்டி, வால்பாறை பகுதிக்கு செல்லும் மக்கள் சென்று வருகின்றனர். தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், ரோடு மோசமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஊத்துக்காடு ரோடு, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. அதன்பின் சீரமைக்காததால் ரோடு குண்டும், குழியுமாக உருமாறியுள்ளது. மழை காலத்தில் ரோடு மோசமாகி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்த ரோட்டில் செல்ல வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
மழைநீர் குட்டை போல தேங்கி விடுவதால், குழி, மேடு தெரியாமல் வாகனத்தில் வருவோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அதிக போக்குவரத்து நிறைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

