/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜினியரிங் கல்லுாரியில் ஆண்டு விழா கோலாகலம்
/
இன்ஜினியரிங் கல்லுாரியில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : மார் 31, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜினியரிங் கல்லுாரியின், 18வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, கோவை அண்ணா பல்கலை பிராந்திய வளாகத்தின் டீன் சரவணகுமார், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். கல்லுாரியின் முதல்வர் ஞானமூர்த்தி, நடப்பாண்டு சாதனைகளை எடுத்துரைத்து, கல்லுாரியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரியின் தலைவர் முருகேசன், தாளாளர் தமிழரசி , துணை முதல்வர் சுதாகர், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

