/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ரா.சித்தா நாயுடு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
/
பா.ரா.சித்தா நாயுடு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
பா.ரா.சித்தா நாயுடு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
பா.ரா.சித்தா நாயுடு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : டிச 04, 2024 10:26 PM

கோவை; சித்தாபுதுாரில் உள்ள பா.ரா. சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.
இதில், தனி நபராகவும், குழு போட்டிகளிலும் பங்கேற்று மாணவ, மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பள்ளி தாளாளர் சாந்தா முன்னிலையில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் நடந்தன. நிறைவில், ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை, ரூபி அணி வென்றது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த், பரிசுகள் வழங்கி பேசுகையில்,''உடல் ஆரோக்கியம், போட்டி மனப்பான்மை, உழைப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டும், குழு செயல் திறமையை வளர்க்கும் விதமாகவும், விளையாட்டு போட்டி நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் மாணவர்கள் உடல், மனதை துாய்மையாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாணவர்களிடம் கடின உழைப்பு, பொறுப்புள்ள அணுகுமுறையை வளர்க்கின்றன,'' என்றார்.