/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் வீரர் மாநில போட்டிக்கு தகுதி
/
அன்னுார் வீரர் மாநில போட்டிக்கு தகுதி
ADDED : செப் 23, 2024 11:09 PM
அன்னுார் : அன்னுார் வீரர் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
முதல்வர் கோப்பைக்கு, குறுமைய அளவில் தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்கள் கோவையில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றனர்.
இதில் அன்னுார் அத்லெட்டிக் கிளப் வீரர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில், அன்னுார் அத்லெட்டிக் கிளப் வீரர் சங்கர் 40.80 மீட்டர் தூரம் எறிந்து முதலிடமும், இனியவன் 36.37 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடமும் பெற்றனர். மகளிருக்கான தட்டெறிதலில் நேகரிஹா 30.50 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடம் பெற்றார்.
பங்கேற்ற முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற வீரர்களை கிளப் தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் பாராட்டினர்.
இதில் சங்கர் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

