/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட போட்டியில் அன்னுார் வீரர் முதலிடம்
/
மாவட்ட போட்டியில் அன்னுார் வீரர் முதலிடம்
ADDED : செப் 10, 2025 10:06 PM

அன்னுார்; முதல்வர் கோப்பைக்கான போட்டியில் அன்னுார் வீரர் முதலிடம் பெற்றுள்ளார்.
கோவை, நேரு விளையாட்டரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் அன்னுார் அத்லெட்டிக் கிளப் வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த கிளப்பின் வீரர் இனியவன் பள்ளி மாணவருக்கான தட்டெறிதல் போட்டியில், 39. 50 மீ., தூரம் எறிந்து முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் ஸ்ரீநாத் 36.5 மீ., தூரம் எறிந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
மாணவியருக்கான பிரிவில் ஜெனிபர் 31.5 மீ., தூரம் எறிந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளார். சாதித்த மூவருக்கும் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதலிடம் பெற்ற வீரர் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற் றுள்ளார்.