ADDED : ஆக 27, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் மாணவர், இரண்டு பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், எஸ்.எஸ்.குளம் குறு மைய அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. அன்னுார் அத்லெட்டிக் கிளப்பில் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கனைகள் அதிக இடங்களை பிடித்துள்ளனர். மாணவியருக்கான தட்டெறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில், 24 பதக்கங்களில், 18 பதக்கங்களை வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில், அன்னுார் மாணவர் இனியவன், தட்டெறிதல் மற்றும் குண்டெறிதலில் முதலிடம், ஈட்டி எறிதலில் 3ம் இடமும் பெற்றார். முதலிடம் பெற்ற போட்டிகளில் மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். சாதித்த மாணவ, மாணவியரை, அத்லெட்டிக் கிளப் பொறுப்பாளர்கள் பாராட்டினர்.
