பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி
UPDATED : ஆக 27, 2026 06:36 PM
ADDED : ஆக 27, 2026 06:33 PM
கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி செப்., அக்., மாதங்களில் நடக்கிறது. வயது வரம்பில்லாத, 12, 14, 16 வயதுக்குட்பட்ட என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
நுழைவு படிவத்தில் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் கையொப்பம் இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மற்றும் மாணவர் சேர்க்கை எண் அடங்கிய நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரே பள்ளி வளாகத்தில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., என வேறு கல்வித்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படும் பட்சத்தில், திட்டம் வாரியாக தனித்தனி அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். நுழைவு படிவத்தை வரும் 31ம் தேதி மதியம் 1:00க்குள் சமர்ப்பித்து, cricketcdca@gmail.com என்ற இணையதளத்தில் நுழைவை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 80729 48889 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, சங்க இணை செயலாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
