/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் இணைந்தது அன்னுார் ஒன்றியம்
/
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் இணைந்தது அன்னுார் ஒன்றியம்
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் இணைந்தது அன்னுார் ஒன்றியம்
திருப்பூர் மாவட்ட தி.மு.க.,வில் இணைந்தது அன்னுார் ஒன்றியம்
ADDED : பிப் 17, 2025 10:42 PM
அன்னுார்; தி.மு.க., அமைப்பு ரீதியாக, அன்னுார் ஒன்றியம், கோவை வடக்கு மாவட்டத்தில் இருந்து மாற்றப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வில் கட்சி ரீதியாக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகள் உள்ளன. மூன்று மாவட்ட செயலாளர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் கட்சி ரீதியாக திருப்பூர் மாவட்டம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி, திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டு தொகுதிகள், திருப்பூர் வடக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இதுவரை கோவை வடக்கு மாவட்டத்தில் இருந்த அன்னுார் ஒன்றியம் தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.